குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு துயர சம்பவம்
உலகில், சமீப காலமாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், குழந்தைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்
அவ்வகையில், செவ்வாய்க்கிழமை மதியம், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், பள்ளியிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு கூட்டம் பிள்ளைகள் மீது, 23 வயது நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில், மூன்று பிள்ளைகள் காயமடைந்தார்கள். அவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான், ஐந்து வயதுள்ள இரண்டு சிறுவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.