;
Athirady Tamil News

ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்

0

நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan) குறித்த குழுவிற்கு தலைமை தாங்கினார்.

இந்த நிலையில் அவர் வெளியிடுகையில், “இலங்கையின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி சவால்கள் தொடர்பாக ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் இலங்கை பொருளாதாரக் குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.

சீர்திருத்த இலக்குகள்

2022 இல் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னர் கடின வெற்றிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

சீர்திருத்த முயற்சிகளுக்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிப்பதில் உறுதியான பங்காளியாக உள்ளது மற்றும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த இலக்குகளை அடைவதில் உதவ தயாராக உள்ளது.

ஐஎம்எப் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக ஐஎம்எப் குழு இலங்கையின் பொருளாதாரக் குழுவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.