கருங்கடலில் தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் பாம்பர் விமானம்
ரஷ்யா இயக்கிய Tu-22M3 சூப்பர்சானிக் பாம்பர் விமானம், கருங்கடலில் அவசரமாக குறிவைத்து தவறுதலாக ஒரு வணிக கப்பலை தாக்கியது என்று பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 11, 2024 அன்று நடந்துள்ளது.
உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் இருந்து எகிப்து நோக்கி பயணித்திருந்த “அயா” () என்ற வாணிபக் கப்பல், 26,000 டன் தானியத்தை ஏற்றிச் சென்றபோது, ஒரு ஏவுகணை தாக்கியது.
ஆனால், ஏவுகணை வெடிக்காததால் பாரிய சேதத்தை தவிர்த்திருக்கக்கூடும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தவறான குறிவைத்தல் எனவும், ரஷ்ய விமானிகள் உக்ரைனின் surface-to-air missile தாக்குதல்களைத் தவிர்க்க விரைவாக அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்காக அவசரமாக கப்பலை குறிவைத்ததாக பிரித்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Tu-22M3 பாம்பர் நீண்ட தூர வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் கடல் மற்றும் தரை அடிப்படையிலான இலக்குகளை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.