கழிவறையில் உளவு வேலை பார்த்த பெஞ்சமின் நெதன்யாகு: அம்பலப்படுத்திய போரிஸ் ஜோன்சன்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தாக முன்னால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார்.
கழிவறையில் இருந்து
கடந்த 2017ல் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்த நிலையிலேயே கழிவறையில் இருந்து ஒட்டுக் கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் திகதி வெளியாகவிருக்கும் தமது நினைவுக் குறிப்புகள் நூலில், போரிஸ் ஜோன்சன் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜோன்சன் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேல் பொருத்தியுள்ளதாக புகார்
இரு தலைவர்களும் இடையே சந்திப்பு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு.
இதன் பின்னரே கழிவறையில் இருந்து ஒட்டுக் கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை இஸ்ரேல் பொருத்தியுள்ளதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.