தக்காளியில் எவ்வளவு நன்மை இருக்கிறது?ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாது
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக உள்ளது.
தக்காளியில் அதிக சத்துக்கள் நிறைந்த காணப்படுகின்றது. இதில் உடலுக்கு தேவையான பயன் நிறையவே காணப்படுகின்றது. ஆனால் இதை குறிப்பிட்ட சிலர் உண்பதை தவிர்க்க வேண்டும்.
இதில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் அடங்கி காணப்படுகின்றது. இது தவிர இதில் அதிகமாக இருப்பது வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம், சோடியம் போன்ற உடலுக்கு தேவையான பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதை தினமும் உண்பது பலன் தரும். அந்த வகையில் எந்த பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய்
தக்காளி லைகோபீன் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டது. இது உடலில் செல்களுளின் சேதத்தை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல் என்பதை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டு காணப்படுகின்றது. ஆனால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய் இருப்பவர்கள் தக்காளி அதிகமாக சாப்பிட கூடாது.
இதய அரோக்கியம்
தக்காளியில் அதிகமாக இருக்கும் சத்துக்களில் பொட்டாசியம் ஒன்று. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதில் கல்சியம் இருப்பதால் அது கொலஸ்ரால் அளவை குறைக்க உதவும். ஆனால் இதை இதய ஆரோக்கியம் அற்றவர்கள் அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.
மூட்டு வலி
தக்காளியை அதிகமாக உட்கொள்வது மூட்டு வலி மற்றும் எடிமா என்னும் உடல் வீக்கதை ஏற்படுத்தும். காரணம் இதில் சோலனைன் என்ற அல்கலாய்டு உள்ளது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மூட்டுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதை குறைந்தளவில் அல்லது சாப்பிடாமல் இருப்பது நல்லது.
அஜீரண கோளாறு
தக்காளி செரிமானத்திற்கு ஒரு சிறந்த காய்கறியாக கருதப்படுகின்றது. இதை நீங்கள் உணவாக ஒரு அளவிற்கு மேல் உட்கொண்டால் உடலில் அமிலத்தன்மை அல்லது அமில வீக்கத்தை ஏற்படுத்தலாம். தக்காளி அமிலத்தன்மை கொண்டது என்பதால், ஆசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கும். இதனால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது.
சிறுரீக நோய்
தக்காளியில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கும். தக்காளியில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு நண்பன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே தக்காளியை சாப்பிடுவது நல்லது. இந்த நோயாளிகள் தக்காளி சூப், தக்காளி சாஸ் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.