சனாதனம் பற்றி மூச்சு முட்ட பேசிய பவன்கல்யாண் – ஒரே வாத்தையில் கூலாக பதில் சொன்ன உதயநிதி!
சனாதனம் குறித்துப் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்குத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சனாதனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறையத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். தமிழ்நாட்டில் சிலர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் மாதிரி அதனை நாசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க இயலாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.சனாதன தர்மத்தைத் தாக்கிப் பேசுபவர்களைக் கண்டும் காணாமல் இருப்பது இல்லை.
நம்முடைய ராமரைத் தாக்கி பேசியவர்களை உற்சாகப்படுத்தினீர்கள். இதுபோல் செயல்படக்கூடாது அப்படிச் செய்யக்கூடாது என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்கி பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
பவன் Vsஉதயநிதி
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் அழிந்து விடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்கு let’s wait and see என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது.
ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.