மைத்திரி வீட்டிற்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பெண்
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் பெண் ஒருவர் மோசமாக செயற்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி மாலை வெள்ளை நிற காரில் வந்து, கத்தி, கூச்சலிட்டு வன்முறையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய குருந்துவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருந்துவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணால் குழப்பம்
குறித்த பெண் வந்த வெள்ளை நிற காரின் இலக்கமும் பொலிஸ் சார்ஜன்ட் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மைத்திரியின் சகோதரரும் பிரபல அரிசி விற்பனையாளருமான டட்லி சிறிசேனவையும் குறித்த பெண் திட்டியதாக பொலிஸ் சார்ஜன்ட் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
அத்துடன் அந்த பெண்ணின் வெள்ளை நிற கார் இலக்கம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.