புதிய அரசாங்கத்தின் வருகை காரணமாக அரசியலை துறக்கப்போகும் அரசியல்வாதிகள்
தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோரும் அடங்குவார்கள்.
இதனைத்தவிர காமினி லொகுகே, ஜோன் செனவிரத்ன, மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரும் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர்.
இளைஞர்களை உள்ளீர்க்கும் முயற்சி
இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற பாரம்பரியக் கட்சிகள், இளைஞர்களை கட்சிக்கு உள்ளீர்க்க முடிவு செய்துள்ளன.