ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை… அரிய காட்சி!
சதுப்பு நிலத்தில் வாழும் தவளைகள் அங்கு பறந்து திரியும் டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடும் அரிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே டிராகன்ஃபிளைகளை பிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான் அவற்றின் விரைவான அசைவுகள் மற்றும் கூர்மையான பார்வை காரணமாக அவற்றைப் பிடிப்பது அசாத்தியமானது.
தவளைகளுக்கு மட்டுமல்ல ஏனைய வேட்டை பறவைகள் மற்றும் விலங்குளளுக்கும் டிராகன்ஃபிளைகளை இரையாக்குவது பெரும் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் சதுப்பு நிலங்களில் வாழும் தவளைகள் குதிப்பதற்கு வலைப் பாதங்கள் மற்றும் கூடுதல் அணுகலுக்காக நீண்ட நாக்குகள் போன்ற சிறப்புப் பண்புகளைப் கொண்டுள்ளன.
இருப்பினும், பறக்கும் போது ஒரு டிராகன்ஃபிளை பிடிப்பது இவைகளுக்கு ஒரு சவாலாகவே காணப்படுகின்றது பல அணுகுமுறைகளை கையாண்டு பல போராட்டங்களுக்கு பின்னர் டிராகன்ஃபிளையை வேட்டையாடிய அரிய காட்சி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.