இஸ்ரேல் போரால் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா: நிபுணர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மோதலுக்குள் அமெரிக்கா இழுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் ஒருபக்கம் லெபனானில் தரைவழித் தாக்குதலை துவங்கியுள்ளது, மறுபக்கம் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது.
அமெரிக்கா இஸ்ரேலின் முக்கிய கூட்டாளர். ஆக, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால், ஈரானுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அமெரிக்கா ஆளாகலாம் என எச்சரிக்கிறார் லண்டன் King’s College பேரசிரியரான Dr. Andreas Krieg என்னும் நிபுணர்.
அமெரிக்கா போருக்குள் இழுக்கப்படுவதுடன், பிரச்சினை பெரிதாகவும் செய்யும், அது ஏற்கனவே பெரிதாகிவிட்டது என்கிறார் அவர்.
என்றாலும், அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நிலையில், தலைமைப் பொறுப்பில் காணப்படும் வெற்றிடம் காரணமாக, அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாத ஒரு நிலைமையும் காணப்படுகிறது என்றும் கூறியுள்ளார் அவர்.