ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த பெருமழை: போஸ்னியாவில் பறிப்போன 16 பேர் உயிர்
போஸ்னியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாள் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
உள்ளூர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் Darko Juka தெரிவித்த தகவலில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகள் பெறும்பாலும் Jablanica நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலில், [1992- போருக்கு பிறகு இத்தகைய மிகப்பெரிய நெருக்கடி தனக்கு நினைவில் இல்லை என்றும், இந்த குழப்பமான சூழ்நிலை எனக்கு வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன நபர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு சிக்கி உயிருக்கு போராடி வரும் நபர்களை பத்திரமாக மீட்பதே தங்களின் முதல் முன்னுரிமை என்று நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Zukan Helez தெரிவித்துள்ளார்.