பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படை தளபதி
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி
மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேல் ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், வடக்கு லெபனானின் திரிபோலியில் (Tripoli) உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அங்கு மறைந்திருந்த ஹமாஸ் ஆயுதப்படை பிரிவின் தலைவர்களில் ஒருவரான சயீத் அட்டால்லா(Saeed Atallah) கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹமாஸ் சார்பு ஊடகம் இன்று காலை வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தளபதி சயீத் அட்டால்லா தனது 3 குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக காசாவின் சிறந்த ஆயுதப்படை பிரிவாக கருதப்படும் al-Qassam படைப்பிரிவின் தலைவராக சயீத் அட்டால்லா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுதிப்படுத்தாத இஸ்ரேல்
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எத்தகைய தகவலும் இதுவரை வழங்கவில்லை.
இஸ்ரேலின் இந்த தாக்குதலானது, லெபனானை சிரியாவுடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்கு பிறகு நடந்துள்ளது.