வௌவாலிடமிருந்து பரவிய வைரஸ் தொற்று: கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனடாவின் ஒன்ராறியோவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அவன் உயிரிழந்துள்ள விடயம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள ஒரு வீட்டில் சிறுவன் ஒருவன் உறங்கிக்கொண்டிருந்த அறையில் ஒரு வௌவாலைக் கண்டுள்ளனர் அவனது பெற்றோர்.
குழந்தையை வௌவால் கடித்துள்ளதா, அல்லது நகக்கீறல் ஏதாவது குழந்தையின் உடலில் பட்டிருக்கிறதா என அவனது பெற்றோர் சோதித்துள்ளனர்.
அப்படி எதுவும் தெரியவில்லை என்றதும், அவர்கள் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் அப்படியே விட்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்தச் சிறுவன் பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்துவிட்டான்.
அந்த வௌவாலிடமிருந்து அவனுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவனுடன் தொடர்பிலிருந்த மற்றவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட இருக்கிறார்கள்.
1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்படி ரேபிஸ் தொற்றுக்கு ஒருவர் பலியான சம்பவம், கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், யாராவது வௌவால்களைத் தொட்டிருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகுமாறு ஒன்ராறியோ தலைமை மருத்துவ அலுவலரான Dr Kieran Moore அறிவுறுத்தியுள்ளார்.
சில ஊடகங்கள் ரேபிஸ் நோயால் இறந்த அந்தக் குழந்தை ஒரு சிறுவன் என குறிப்பிட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள் அது சிறுவனா அல்லது சிறுமியா என குறிப்பிடாமல், குழந்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதால், உயிரிழந்த குழந்தை ஆணா பெண்ணா என்பது உறுதியாகத் தெரியவில்லை.