பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டம்
பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டமிட்டு உள்ளதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் திரி மேத்தூ தெரிவித்துள்ளார்.
மாணவர் பரிமாற்றம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கின்றது என்று அவர் கூறினார்.
ஜனவரியில் இந்தியா வருகை தந்தபோது, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இதனை அறிவித்திருந்தார்.
அதோடு, ஜூலை 2023-இல் பிரதமர் மோடியின் பிரான்ஸ் வருகையின் போது, இந்திய மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு 5 வருடங்கள் வரை செல்லக்கூடிய சுசென் விசா () வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் இந்திய மாணவர்களை வரவேற்க பலவித பயிற்சிகள் மற்றும் ஆங்கிலம் மூலமாக பாடங்களை வழங்கி வருகின்றது. மேலும், பிரான்ஸில் படிக்க விரும்புவோருக்கான கல்வி கண்காட்சி அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, இந்தியாவின் வணிக வளர்ச்சி குறித்து தூதர் மேத்தூ பாராட்டியதோடு, பிரான்ஸ் இந்தியாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகக் கூறினார்.
இந்தியா பிரான்ஸ் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது, குறிப்பாக 2023-இல் 16 பில்லியன் யூரோ மதிப்பிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிகழ்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இந்தியாவின் விமானப் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய மாணவர்களுக்கு தற்போது PG படிப்புக்கு ஐந்து வருட வேலை விசா வழங்கப்படும் எனவும், இதனால் இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் மேலும் திறந்திருக்கிறது என அவர் கூறினார்.