ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: முக்கிய நபர் கைது
ஜேர்மன் நகரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்
ஜேர்மனியின் கொலோன் நகரில் சமீபத்தில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
அது தொடர்பாக 10க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
முக்கிய நபர் கைது
இந்நிலையில், அந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 22 வயது நபரை ஜேர்மனிக்குக் கொண்டுவரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
பின்னணி
இதற்கிடையில், இந்த சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருட்கள் திருட்டு ஒன்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது, போதைப்பொருட்கள் கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஒரு கும்பல், தங்களுக்கு வந்து சேர வேண்டிய போதைப்பொருள் அல்லது அதற்குரிய இழப்பீடு இரண்டில் ஒன்றைத் திரும்பப் பெற முயன்றுவருவதாக தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.