;
Athirady Tamil News

பிரான்ஸ் புதிய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

0

பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தல் அறிவித்த நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

புதிய பிரதமர்

முன்னிலை வகிக்கும் இடது சாரியினர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படவே, ஜனாதிபதி மேக்ரான், மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை பிரதமரான தேர்வு செய்தார்.

அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய இடதுசாரியினரைவிட குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பார்னியேர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து இடதுசாரியினர் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
இந்நிலையில், நேற்று இடதுசாரியினர் பிரதமர் மிஷெல் பார்னியேர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், வலதுசாரியினரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெறும்.

ஆனால், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த Marine Le Pen, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

அரசியல் லாபங்களுக்காக நாட்டை குழப்பத்துக்குள்ளாக்க விரும்பவில்லை என அவர் கூறியுள்ளதால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.