;
Athirady Tamil News

சில மணி நேரங்களில் 600 பேர் படுகொலை.! ஆப்பிரிக்க நாடொன்றில் நடந்த பெருந்துயரம்

0

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் நடந்த கொடூர சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புர்சாலோகோ நகரில், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாத குழுவான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் (JNIM) பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டுள்ளனர்.

சில மணி நேரங்களில், கிட்டத்தட்ட 600 பேரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆகஸ்ட் 24 அன்று நடந்த இந்த படுகொலை தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பைக்கில் வந்த தீவிரவாதிகள் பறவைகளை வேட்டையாடுவதுபோல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். தங்களை துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதாக அவர்கள் கூறினர்.

ஊடக செய்திகளின்படி, இந்த சம்பவத்திற்குப் பின்னர் சடலங்களை சேகரிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு மூன்று நாட்கள் ஆனது.

ஆரம்பத்தில், இந்த சம்பவத்தில் 200 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டது. ஆனால், 600 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.