அடுத்த மன்னர் யார்? இளவரசர் வில்லியமா ஹரியா? திரைமறைவில் நடக்கும் விடயங்கள்
இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்க 73 வயது வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால், அவர் மன்னராக பதவியேற்றும், நீண்ட காலம் அரியணையில் அவரால் அமரமுடியுமா என்ற கேள்விக்குறியை உருவாக்கியது, அவரை புற்றுநோய் தாக்கிய விடயம்.
ஆக, மன்னருக்கு புற்றுநோய் என்றதுமே, பிரித்தானிய மரபுப்படி, அடுத்த மன்னர் யார் என்பதை முடிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.
அடுத்த மன்னர் யார்? இளவரசர் வில்லியமா ஹரியா?
இந்நிலையில், யாரும் எதிர்பாராத ஒருவர் அடுத்து பிரித்தானியாவின் மன்னராவார் என சில ஜோதிடக்கலைஞர்கள் ஆரூடம் கூற, ஒருவேளை அது இளவரசர் ஹரியாக இருக்குமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது.
அத்துடன், இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய செல்லப்பிள்ளை என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது!
ஆனால், திரைமறைவில், இளவரசர் வில்லியமை மன்னராக்குவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுவிட்டதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வில்லியம் தாமாகவே முடிவுகள் எடுக்கவும் துவங்கியுள்ளார். மன்னருடைய புற்றுநோய் குறித்து தகவல் வெளியானதுமே, Ian Patrick என்பவரை தனது தனிச்செயலராக தாமே நியமித்துக்கொண்டார் வில்லியம்.
மேலும், அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளது, அவர் சர்வதேச விவகாரங்களுக்கும் திரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளது.
மன்னரோ, தனக்கு புற்றுநோய் என்று தெரியவந்தபிறகும், சற்றும் சோர்ந்து போகாமல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆக, அவரே மன்னராக தொடருவாரா? அல்லது வில்லியமோ ஹரியோ மன்னராக பொறுப்பேற்பார்களா என்னும் கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.