;
Athirady Tamil News

லண்டனில் குவிந்த 300,000 மக்கள்… 17 பேர்களை கைது செய்த பொலிசார்

0

மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இனரீதியாக மோசமாக

குறித்த பேரணியில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குறிப்பிட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். பொது ஒழுங்கு மீறல்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர், அவற்றில் நான்கு பேர்கள் இனரீதியாக மோசமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவசரகால ஊழியர் ஒருவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் பொதுவான தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஒரு நபர் பொது ஒழுங்கு சட்டத்தின் நிபந்தனையை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சுமார் 300,000 மக்கள்

பாராசூட் அணிந்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தினர். அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை குறிப்பிடும் வகையில் பாராசூட் அடையாளப்படுத்தப்படுகிறது.

சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 300,000 மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே இஸ்ரேல் ஆதரவு பேரணியும் லண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் இரு குழுக்களும் தனித்தனியாக பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.