அடுத்து உக்கிரமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கும் ஈரான்
இஸ்ரேல் இன்னொரு தாக்குதலுக்கு முயற்சி செய்தால், தங்களின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் தெளிவாக உள்ளது
இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் எங்கள் எதிர்வினை என்ன என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி சிரிய தலைநகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேலின் ஒவ்வொரு செயலுக்கும், ஈரானிடம் இருந்து விகிதாசார மற்றும் ஒத்த எதிர்வினை இருக்கும், அது மிகவும் வலுவாக இருக்கும் என்றார். முன்னதாக இஸ்ரேலின் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சட்டவிரோதமான ஈரானிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.
போர்நிறுத்தம் தேவை
அது எந்தவகையில் இருக்கும் என்பதை வெளிப்படையாக விவாதிக்கும் பொறுப்பு தமக்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே காஸா மற்றும் லெபனானில் போர்நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் அப்பாஸ் அராச்சி கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் பொறுப்புக்கு வந்த பின்னர் முதல் முறையாக அமைச்சர் அராச்சி சிரியா சென்றுள்ளார். இன்று மிக முக்கியமான பிரச்சினை என்ன என்பது லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம் தேவை என்பது தான் என்றார்.