பிரித்தானியாவில் காணாமல் போன தாய்! பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தேடல் முயற்சி
பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக காணாமல் போன தயாரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட தேடும் பணி
பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில்(North Yorkshire) மாயமான தாயார் விக்டோரியா டெய்லரை(Victoria Taylor) தேடும் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை, பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரவு பெய்த கனமழையால் டெர்வெண்ட் ஆறு(River Derwent) மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் தன்னார்வலர்கள் தங்கள் தேடலை தொடர முடியாது என்று அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
மீட்பு உதவிக்காக மால்டனில் (Malton) கூடியிருந்த நூற்றுக்கணக்கானோருக்கு இந்த செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாக கிடைத்துள்ளது.
எச்சரிக்கையை மீறி நடக்கும் தேடுதல் பணி
இந்நிலையில் பொலிஸாரின் எச்சரிக்கைகளையும் மீறி பலர் தங்கள் சொந்த முயற்சியில் ஆற்றின் கரையோரத்தில் காணாமல் போன விக்டோரியாவை தேடி வருகின்றனர்.
காணாமல் போன தாய் விக்டோரியா டெய்லர் கடைசியாக திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பார்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கடைசியாக பார்க்கப்பட்ட போது நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருந்ததோடு அடிடாஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர்வாசிகள் கவலை
இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் தன்னார்வலர்களின் பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சமீபத்திய மழையைக் கருத்தில் கொண்டு குடியிருப்பாளர் ஒருவர், மால்டன் மற்றும் லோ ஹட்டன்(Low Hutton) இடையே உள்ள பகுதி மழையால் மிகவும் ஆபத்தானதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் டெய்லரை ஆற்றின் குறுக்கே தேடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
அதே சமயம் டெய்லரின் இருப்பிடத்தைப் பற்றி தகவல் உள்ளவர்கள் உடனடியாக 101 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.