அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த ஈரான்… மத்திய கிழக்கில் திடீரென்று இறுகும் போர் நெருக்கடி
திங்கட்கிழமை பகல் 6 மணி வரையில் சுமார் 9 மணி நேரம் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் திடீரென்று ரத்து செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது அதிரடியாக
ஈரான் அரசு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது அதிரடியாக ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்கும் முன்னரும், விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை ஈரான் விதித்திருந்தது. குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் கூறி வருகிறது.
தற்போது சுமார் 9 மணி நேரம், அதாவது உள்ளூர் நேரப்படி ஞாயிறன்று இரவு 9 மணி முதல் திங்கட்கிழமை பகல் 6 மணி வரையில் விமானங்கள் பறக்க ஈரான் தடை விதித்துள்ளது.
ஈரானின் அனைத்து விமான நிலையங்களும் ஞாயிறு இரவு 9 மணி முதல் செயல்படாது என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் ஈரான் இன்னொரு தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ள நிலையில்,
ஈரான் தரப்பில் இருந்து விமான சேவைகள் ரத்து தொடர்பான, அதுவும் சுமார் 9 மணி நேரம் ரத்து செய்வதாக வெளியான தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அக்டோபர் 7ம் திகதி காஸா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், ஞாயிறன்று பகல் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதலை ஏற்காது
தங்கள் மீதான அச்சுறுத்தலை விலக்கவில்லை என்றும் நாங்கள் போரின் போக்கை தெளிவாக மாற்றியுள்ளோம் மற்றும் போரின் சமநிலையை மாற்றியுள்ளோம் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் முன்னெடுத்துள்ள பணியை முடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மீது இதுவரை இரண்டுமுறை நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு,
உலகின் எந்த நாடும் தனது நகரங்கள் மற்றும் குடிமக்கள் மீது இத்தகைய தாக்குதலை ஏற்காது, இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளாது என்றார். இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்குக் கடமையும் உரிமையும் உண்டு என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு,
உரிய நேரத்தில் முறையான முடிவெடுக்கப்படும் என்றார். ஆனால், தங்களது எச்சரிக்கை தாக்குதலுக்கு பதிலடி தர முயன்றால், அடுத்த தாக்குதல் உக்கிரமாக இருக்கும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.