;
Athirady Tamil News

உயர் எச்சரிக்கை நிலையில் இஸ்ரேல்… காஸா, பெய்ரூட் மீது தீவிரமடையும் தாக்குதல்

0

ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற நிலையில், இஸ்ரேல் உயர் எச்சரிக்கை நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நினைவேந்தல் நிகழ்ச்சிகள்

ஹமாஸ் தாக்குதல் தொடுத்த ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை இஸ்ரேலில் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீதும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குறிப்பிட்டு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

லெபனான் தலைநகர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், பொதுமக்களை மொத்தமாக வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்த பகுதியானது உயர் எச்சரிக்கை நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 7ம் திகதி இந்த ஆண்டும் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஈரானில் திங்கட்கிழமை பகல் 6 மணி வரையில், சுமார் 9 மணி நேரம் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியான நிலையிலேயே, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கான சூழலை உருவாக்கும்
சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது எங்கே தாக்க வேண்டும் என்பதை இஸ்ரேல் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எல்லை மீற வேண்டாம் என இஸ்ரேல் நிர்வாகத்திற்கு அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் மிகப்பெரிய போருக்கான சூழலை உருவாக்கும் என்றே அமெரிக்கா கூறி வருகிறது.

இதனிடையே, ஈரானிய அணுசக்தி அல்லது எண்ணெய் உற்பத்தியை குறிவைக்க வேண்டாம் என்று ஜோ பைடன் நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, காஸா மீதும் தற்போது பெய்ரூட் மீதும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களை கட்டுப்படுத்த அமெரிக்காவால் முடியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.