;
Athirady Tamil News

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

தேங்காய் ஒன்று சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

முட்டை விலை
இதேவேளை, நாடளாவிய ரீதியில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், முட்டைகளின் விலை 40 ரூபாவை தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.