;
Athirady Tamil News

யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..!

0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வேட்பாளர் பட்டியல்

செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், செபஸ்ரியாம்பிள்ளை மேவிஸ் ஜீன்சியா, மகாதேவன் நடனதேவன்,கனகரட்னம் சுகாஷ், வாசுகி சுதாகர், கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், தங்கவேல் ஜெகதீஸ்வரன், ஞான குணேஸ்வரி கமலச்செல்வம்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.