;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றில் முன்னிலை

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன (Nilantha Jayawardena) உயர்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று ( 07.10.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு
ஆனால் அவர் நட்ட ஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.

அது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நிலந்த ஜயவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.