;
Athirady Tamil News

ஐரோப்பாவின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தலைநகரமாக உருவெடுத்துள்ள பிரித்தானியா.!

0

பிரித்தானியாவில் அனுமதி இன்றி வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை 745,000 என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் செய்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது ஐரோப்பாவின் எந்த நாடிலும் இல்லாத அளவிற்கு அதிகமானது எனக் கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கையை பொறுத்து, பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் அனுமதி இன்றி வாழ்ந்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது பிரான்சில் வாழ்ந்து வரும் 300,000 பேரையும், ஜேர்மனியில் உள்ள 700,000 பேரையும் விட அதிகமாகும்.

இதற்கிடையில், சமீபத்தில், 973 பேர் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்கு வந்திருப்பதாகவும், இது இந்த ஆண்டின் அதிகபட்ச நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருகையால், 2024ஆம் ஆண்டில் இதுவரை வந்தவர்கள் எண்ணிக்கை 26,612-ஆக உயர்ந்துள்ளது.

ருவாண்டா திட்டம் கைவிடப்பட்டதன் மூலம், ஆபத்தான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழைய நினைக்கும் மக்களுக்கு ஒரு தடையை நீக்கிவிட்டதாக கன்சர்வேடிவ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர் கட்சி, எல்லைக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்வதாகவும், சட்ட விரோத புலம்பெயர்ந்தோர்களை திரட்டும் கும்பல்களை முறியடிக்க கைகொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், உள்துறை செயலாளர் யவெட் கூப்பர், எல்லை பாதுகாப்பு மேம்பாட்டிற்காக 75 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்யவுள்ளதாகவும், மனிதக் கடத்தல் கும்பல்களை தடுக்க தேசிய குற்றப்புலனாய்வுக் குழுவுக்கு நிதி வழங்கவுள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இந்த வாரம், ஜி7 நாடுகளும் பிரித்தானியாவும் மனிதக் கடத்தலை தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.