;
Athirady Tamil News

வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்! 70 வயது பிரித்தானிய பெண் ஆச்சரியம்

0

பிரித்தானியாவில் வசிக்கும் 70 வயது பெண் ஒருவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு தனது வேலை விண்ணப்பத்திற்கு பதிலை பெற்றுள்ளார்.

48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம்
மோட்டார் சைக்கிள் சாகசக்காரரான டிசி ஹாட்சன்(Tizi Hodson), 1976 ஆம் ஆண்டில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தார், ஆனால் அவரது கடிதம் தபால் துறையால் தவறாக வைக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்கு பிறகு, இந்த கடிதம் தபால் நிலையத்தின் ஒரு மேஜையின் பின்னால் சிக்கியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடிதம் டிசி ஹாட்சனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியப்பட்ட வெண்டி ஹாட்சன்
இது தொடர்பாக பிசிசி-யிடம் பேசிய போது, இத்தனை வருடங்களுக்குப் பிறகு கடிதத்தைப் பெறுவது அற்புதமானது” என்று ஹாட்சன் தெரிவித்துள்ளார்.

“நான் லண்டனில் உள்ள என் குடியிருப்பில் அமர்ந்து கடிதம் எழுதியதை மிகத் தெளிவாக நினைவுபடுத்துகிறேன்” “தினமும் என் தபால் பெட்டியைப் பார்த்தேன், ஆனால் அங்கே எதுவும் இல்லை. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் நான் உண்மையிலேயே, மோட்டார் சைக்கிள் சாகச ஓட்டுநராக இருக்க விரும்பினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தபால் துறை எவ்வாறு ஹாட்சனின் தற்போதைய முகவரியைக் கண்டறிந்தது என்பது இன்னும் புரியாத புதிர். கடந்த 48 ஆண்டுகளாக ஹாட்சன் பல முறை வீடு மாறியுள்ளார் என்பதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.