2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இருவர்!
2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.