தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உள்ளிட்ட முக்கிய பலர்!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து சட்டத்தரணி உள்ளிட்ட முக்கிய பலர் வெளியேறியுள்ளனர்.
தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த சட்டத்தரணி தவராசா உள்ளிட்ட பலர், வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அந்தவகையில் சட்டத்தரணி தவராசா, மாமனிதர் ரவிராஜ் மனைவி திருமதி சசிகலா ரவிராஜ், சட்டத்தரணி உமாகரன் இராசையா உள்ளட்டவர்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டும் அவர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேவேளை வாய்ப்புக்கொடுத்த வன்னிமாவட்ட பிரதிநிதி தன்ஞ்செயன் அவர்களும் தமிழரசு கட்சியின் குழப்பம் காரணமாக அவரும் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதேவேளை கட்சிக்குள் சுமந்திரன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக இலங்கை தமிழரசு கட்சியின் மகளின் அணியும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.