;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பதற்றத்தை ஏற்படுத்த முயலும் முக்கிய நாடு

0

பிரித்தானியா (UK) உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமான குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியா தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகையில் MI5 தலைவர் கென் மெக்கலம் (Ken McCallum) இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதராவாக பிரித்தானிய செயற்பட்டு வருகிற நிலையில், பிரித்தானியாவில் நெருப்பு வைத்தல், நாசவேலை, மிக ஆபத்தான நடவடிக்கைகளை முன்னெடுக்க ரஷ்ய உளவுத்துறை செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கை

அத்துடன், கடந்த 2022 ஆண்டு முதல் சுமார் ஈரான் ஆதரவு 20 சதித்திட்டங்களை MI5 முறியடித்துள்ளதாக தெரிவித்த மெக்கலம், இணையமூடாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளம் வயதினர் அதிகம் ஈர்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு செயல்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 13 வீதமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கென் மெக்கலம் தெரிவத்துள்ளார்.

ரஷ்ய உளவாளிகள்

மேலும், 2017 முதல் கடந்த 6 வருடங்களில் பிரித்தானியாவில் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் என 43 எண்ணிக்கையில் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் MI5 விசாரணைகளின் படி உள்ளூர் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 750 கடந்துள்ளதாக தெரிவித்த மெக்கலம், அதில் பெரும்பாலானோர் ரஷ்ய உளவாளிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உளவாளிகள் என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய தூதுவர்களுக்கு இராஜதந்திர விசா மறுக்கப்பட்டதுடன், ரஷ்ய நடிகர்களும் உளவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.