உலகின் மிக பயங்கர நபர் ஒருவரின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தல்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனின் மகன் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பிரான்சில் வாழ்ந்துவந்த ஒசாமாவின் மகன்
ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான Omar bin Laden, பிரான்சிலுள்ள Orne என்னுமிடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதத்தை ஆதரித்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டதால் பிரான்சிலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau, ஓமர் பின் லேடன் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுவிட்டதாகவும், இனி அவர் பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓமர் பின் லேடன், பிரித்தானிய பெண் ஒருவரை மணந்து, பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவந்தது குறிப்பிடத்தக்கது.