புடினை ரகசியமாக 7 முறை தொடர்புகொண்ட டொனால்டு ட்ரம்ப்: சிறப்பு பரிசும் அனுப்பி வைப்பு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஆட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் 7 முறை ரஷ்ய ஜனாதிபதி புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு ட்ரம்பின் நெருக்கம்
இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நூல் ஒன்றிலேயே விளாடிமிர் புடின் மற்றும் டொனால்டு ட்ரம்பின் நெருக்கம் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
2020ல் உலகம் மொத்தம் கோவிட் தொற்றால் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், அரிதான அந்த நேரத்தில் எளிதில் கிடைக்க வாய்ப்பில்லாத கோவிட் பரிசோதனை கருவிகளை புடினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக டொனால்டு ட்ரம்ப் அனுப்பி வைத்துள்ளார்.
கோவிட் தொற்று குறித்த அச்சத்தில் இருந்த புடின் அப்போது தனிமைப்படுத்திக்கொண்டதுடன், ட்ரம்ப் அளித்த சிறப்பு பரிசில் நெகிழ்ந்து போனார் என்றும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடின் கோரிக்கை
மட்டுமின்றி, அரிதான பரிசை அனுப்பி வைத்துள்ளதை ரகசியமாக வைத்திருக்கவும் புடின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், புடின் உடனான தொலைபேசி அழைப்பின் போது தமது நம்பிக்கையான ஊழியர்களையும் ட்ரம்ப் அருகே வைத்துக்கொள்வதில்லை என அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்படியான சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை என்றே ட்ரம்ப் தரப்பு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.