சுயேட்சையாக வென்ற இந்தியாவின் பணக்கார பெண் – யார் இந்த சாவித்திரி ஜிண்டால்?
இந்தியாவின் பணக்கார பெண்மணியான சாவித்திரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியானா தேர்தல்
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(08.10.2024) நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் 12 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சாவித்திரி ஜிண்டால்
இதன்மூலம் அக்கட்சி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து 3 வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 31 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதோடு 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
சுயேட்சையாக ஹிசார்(hisar) தொகுதியில் போட்டியிட சாவித்திரி ஜிண்டால்(savitri jindal) 18,941வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சாவித்திரி ஜிண்டால் பிரபல தொழிலதிபர் ஓ.பி. ஜிண்டாலின் மனைவி ஆவார். தற்போது ஓ.பி. ஜிண்டால்(O.P.Jindal) குழுமத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார்.
ஜிண்டால் குழுமம்
போர்ப்ஸ் அறிக்கையின்படி சாவித்திரி ஜிண்டால் மற்றும் குடும்பம் இந்தியாவின் முதல் பணக்கார பெண் ஆவார். இவர்களது சொத்து மதிப்பு 42.2 பில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும். ஜிண்டால் குழுமம் இரும்பு, மின்சாரம், எரிபொருள், சிமெண்ட் என பல துறைககளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற சாவித்திரி ஜிண்டாலுக்கு 2009ல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் பிறகு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்க மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.