நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் நாம் சமைக்கும் முறையா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
உணவுகளை சமைக்கும் முறை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும், உணவை வறுத்தல், வாட்டுதல் போன்ற முறைகளில் தயாரிக்கும் போது கிளைகேஷன் என்ற ரசாயன உப பொருட்கள் உருவாவதாகவும் இது நீரிழிவு நோய்க்கு காரணமாவதாகும் தெரியவந்துள்ளது.
அதாவது, வறுத்தல் முறையில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள், ஃப்ரைடு சிக்கன் மற்றும் கேக்குகள், பிஸ்கட்டுகள், தயார் நிலை உணவுகளில் ADVANCED GLICATION END PRODUCTS எனப்படும் ரசாயனம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
சமைக்கும் முறை?
அதே சமயத்தில் வேக வைக்கப்பட்ட, ஆவி மூலம் சமைக்கப்பட்ட உணவுகளில் இந்த ரசாயனம் இருப்பதில்லை எனவும் பழங்கள், முழு தானியங்கள், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதகாவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. உடல் பருமன் மிகுந்த 38 பேரை,
12 வாரங்களுக்கு வெவ்வேறு உணவு வகைகளை வழங்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னையாக நீரிழிவு நோய் உருவாகி வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.