340 வங்கிகளில் அம்பலமான ஆன்லைன் நிதி மோசடி: அதிர்ச்சியில் மக்கள்!
2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (SL CERT) தெரிவித்துள்ளது.
SL CERT இன் சிரேஷ்ட தகவல் பொறியியலாளர் சாருகா தமுனுபொலவின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
“செப்டம்பர் வரை, ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக 7,210 புகார்களைப் பெற்றுள்ளோம், இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடக தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் அடிப்படையிலான மோசடியில் நாங்கள் குறிப்பாக கவனம் செலுத்தும்போது, சுமார் 20% புகார்கள் நிதி மோசடிகளை உள்ளடக்கியது. ஆன்லைன் வங்கிப் பாவனையாளர்களை இலக்காகக் கொண்டு இணைய மோசடிகள் அதிகரித்து வரும் போக்கை இது எடுத்துக்காட்டுகிறது” என தமுனுபொல தெரிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாததால், குறிப்பாக ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPs) மூலம் பல பாதிக்கப்பட்டவர்கள் மோசடிகளுக்கு இரையாகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“பல பயனர்கள் தங்கள் OTP களைப் பாதுகாப்பதில் சரியான கவனம் செலுத்துவதில்லை. இது பெரும்பாலும் இந்த ஆன்லைன் வங்கி மோசடிகளில் சிக்குவதற்கு காரணமாகிறது,” என்று தமுனுபொல மேலும் கூறினார்.
ஆன்லைன் நிதி மோசடிகளின் அதிகரிப்பு இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிகமான பயனர்கள் ஆன்லைன் வங்கு சேவைக்கு திரும்புவதால் அதிக விழிப்புணர்வின் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.