அதிகாரிகளுக்கு அதிரடி பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுர!
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் காணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.