48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
நாட்டில் பெய்துவரும் அடை மழையால் கம்பஹாவில் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் மானிகளின் நீர் மட்ட பகுப்பாய்வின் படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.