திருச்சியில் 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்ட விமானம்…! சாதுர்யமாக தரையிறக்கிய விமானி
இந்தியாவில்(India) திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுப்டக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மொத்த இந்தியாவே பதற்றத்தில் உறைந்த நிலையில், 144க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த குறித்த விமானம் எவ்வித பிரச்சினையும் இன்றி திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் புறப்பட்டு சென்றது.
தொழில்நுட்ப கோளாறு
இந்த நிலையில் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 616 விமானம் தான் புதுக்கோட்டை பகுதியில் வட்டமடித்து வந்தது தெரிய வந்தது.
துபாய் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் தான் லாண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளே செல்லாததால் வட்டம் அடித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
விமானத்தின் ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது. தொடர்ந்து விமானம் தரையிறங்க முடியாததன் காரணமாக வட்டமடித்து வருவதாகவும், விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
விமானத்தில் எரி பொருளோடு தரையிறக்கப்பட்டால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படும், என்பதால் எரிபொருள் தீர்ந்த பிறகு தரையிறக்க திட்டமிடப்பட்டது.
விமானியில் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட பயணிகள்
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தயார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராப்புசல் பகுதியில் பயணித்த விமானம் 8.15 மணியளவில் தான் வழக்கமாக சுற்றி வந்த சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி திருச்சி விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.
அதே நேரத்தில் விமானத்தின் அடிப் பகுதியை தரையில் உரசி ‘பெல்லி லேண்டிங்’ என்ற முறையில் விமானம் தடை இறக்கப்பட்டது.
விமானியில் சாதுர்யத்தால் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் லேசாக புகை மட்டுமே வந்தது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பயணிகளும் சுற்றுவட்டார பகுதிகளில் திரண்ட பயணிகளும் கைதட்டி உற்சாகமாக பயணிகளை வரவேற்றுனர்.
தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வரும் பணியில் அதிகாரிகளும் தீயணைப்புத் துறை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.