மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்
மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், தற்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார்.
தீவிரமடையும் தாக்குதல்
ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரானும் (Iran) போரில் பங்கெடுத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் காணப்பபடுகிறது.
இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் லெபனானில் உள்ள ஐ.நா தளத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று முன் தினம் (10.10.2024) தாக்குதல் நடத்தியுள்ளது.
ஐநாவின் ப்ளூ ஹெல்மெட் என்ற தளத்தின் மீதே இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா கடும் கண்டனம்
இஸ்ரேல் ஐ.நா தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஹிஸ்புல்லா படைகள் ஐ.நா கட்டிடத்திற்கு அருகில் இருந்து செயற்படுவதாகத் தகவல் கிடைத்ததாகவும் இதன் காரணமாகவே தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் விக்கமளித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா (United States) கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கையைப் போர்க் குற்றம் என இத்தாலி (Italy) விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.