;
Athirady Tamil News

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டம் : ஈரான் ஜனாதிபதியுடன் புடின் சந்திப்பு

0

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை (Masoud Pezeshkian) சந்தித்த போதே புடின் இதனை தெரிவித்துள்ளார்.

போரின் தீவிரம்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஈரானுடனான உறவுகள் எங்களுக்கு முன்னுரிமை, அவை மிகவும் வெற்றிகரமாக வளர்ந்து வருகின்றன.

நாங்கள் சர்வதேச அரங்கில் தீவிரமாக இணைந்து செயல்படுகிறோம், மேலும் உலகில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய எங்கள் பார்வைகள் பெரும்பாலும் மிக நெருக்கமாக இருக்கும்” என புடின் கூறியுள்ளார்.

போருக்கான ஆயுதங்களை தெஹ்ரான் தொடர்ந்து வழங்குவது மற்றும் காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போரை அதிகரிப்பது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இருநாடுகளின் தலைவர்களும் மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மொஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உலகளாவிய பிரச்சினைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பெசெஷ்கியானை ரஷ்யாவிற்கு வருகை தருமாறும் புடின் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.