;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு எதிராக படை திரட்டும் ஹிஸ்புல்லா… வெளியான அவர்களின் புதிய திட்டம்

0

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட போருக்கு ஹிஸ்புல்லா படைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர்களும் எதிரிகளும்

இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதலில் முதன்மையான தலைவர்கள் பலரை இழந்துள்ள ஹிஸ்புல்லா, தற்போது எவ்வுகணை தாக்குதலுடன் தரைவழியான மோதலையும் முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறது.

இஸ்ரேல் முன்னெடுக்க மூன்று வாரகால தாக்குதலில் ஹிஸ்புல்லா படைகள், அதன் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பறிகொடுத்துள்ளது. ஆனால் தற்போது ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேலிய துருப்புக்களை எவ்வளவு திறம்பட எதிர்க்கிறது என்பதை அதன் நண்பர்களும் எதிரிகளும் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஹிஸ்புல்லா படைகளை இஸ்ரேல் எல்லையில் இருந்து துரத்துவதே இஸ்ரேல் படைகளின் நோக்கமாக உள்ளது. அதிரடியான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா படைகள் கொஞ்சம் பின்னடைவை சந்தித்தாலும், இன்னும் மலைபோல குவித்து வைத்துள்ள ஆயுதங்கள் அவர்களுக்கு பலமாக உள்ளது.

இன்னும் பயன்படுத்தவே தொடங்காத சக்திவாய்ந்த ஏவுகணை குவியல் அவர்களிடம் உள்ளது. ஆனால் வான் தாக்குதலால் அதன் ஆயுத குவியல்களை அழித்துள்ளதாகவே இஸ்ரேல் நம்புகிறது.

போருக்கு தயார் நிலையில்

நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர் சில நாட்களுக்கு ஹிஸ்புல்லா படைகள் தடுமாறியது உண்மை தான். ஆனால் அடுத்த 72 மணி நேரத்தில் புதிய செயல்பாட்டறையை உருவாக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில், நஸ்ரல்லாவுடன் குறிப்பிட்ட சில ஹிஸ்புல்லா தலைவர்களும், ஈரானிய தளபதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் தொடரவே, ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டறை தொடர்ந்து செயல்படுவதாகவே கூறப்படுகிறது.

அதாவது லெபனானின் தெற்கில் ஹிஸ்புல்லா படைகள் போருக்கு தயார் நிலையில் இருப்பதுடன், ஏவுகணை வீச்சுக்கும் தயாராக உள்ளனர். ஹிஸ்புல்லா படைகள் நன்கு தயாராகி இஸ்ரேலிய துருப்புகளுக்காகக் காத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

தலைவர்கள் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டாலும், போருக்கு அவர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.