2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: நார்வே நோபல் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களின் இயக்கத்திற்கு 2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு
2024ம் ஆண்டுக்கான உயரிய அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களின் இயக்கமான Nihon Hidankyo வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை இனி எப்போதும் பயன்படுத்த கூடாது, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க வேண்டும் என சாட்சி அறிக்கையின் மூலம் நிரூபித்ததற்கும், இயக்கத்தின் அயராத முயற்சிகளையும் பாராட்டும் விதமாக 2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க முடிவு செய்து இருப்பதாக நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
அணு ஆயுத தடை மீதான அழுத்தம்
நார்வே நோபல் குழுவின் தலைவர் Jorgen Watne, அணு ஆயுத பயன்பாடு மீதான தடை தற்போது மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார்.
மேலும் உலகின் முன்னணி நாடுகள் தங்களின் ஆயுதங்களை நவீனமயமாக்கி வருவதும், பல்வேறு நாடுகள் அணு ஆயுதங்களை பெற தயாராக இருப்பது அச்சுறுத்தல்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.
அணு ஆயுதங்களானது பல மில்லியன் மக்களை கொல்ல கூடியது, பருவ கால நிலைகளை மற்றும் மனித நாகரிகத்தை அழிக்க கூடியது என்றும் எச்சரித்துள்ளார்.