;
Athirady Tamil News

144 உயிர்களை காப்பாற்றிய விமானிகள் – விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் முதல்வர் சொன்ன வார்த்தை!

0

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு ஏர் இந்தியா(air india) விமானம் 141 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது.புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது.

இந்த நிலையில் விமான பயணிகளிடம் தொழில்நுட்ப கோளாறு குறித்து அறிவிக்கப்பட்ட போது பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மேலும், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

முக ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது: “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும்,

அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.

பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன்.

பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!” என அதில் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.