ஆபத்தான புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: டிரம்பினால் பரபரப்பு
அமெரிக்கர்களை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் ஆபத்தானவர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள்.
அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், காவல்துறையினரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இந்த முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.