ராஜபக்சர்கள் எவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை ; ரணிலுக்கு கட்சியே இல்லை
ஊழ்வினைப்பயனாக ராஜபக்ச கும்பலது அரசியல் முற்றாக இல்லாது இலங்கையின் காலமாற்றம் அமைந்துள்ளதை போன்று கட்சிகளை பிளந்து ரணில் கட்சியும் பலசில்லுகளாக பிளவுண்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களாக நாடாளுமன்றத்திலும், நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்குச் செலுத்திய ராஜபக்சர்கள் எவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன உட்பட கடந்த அரசாங்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதிகளாக செயல்பட்ட பலரும் தேர்தலில் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுவதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களாக செயல்பட்ட ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, சம்பிக்க ரணவக்க, பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, செஹான் சேமசிங்க, டளஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, லக்ஷ்மன் கிரியெல்ல, அலி சப்ரி, காமினி லொகுகே, சி.வி.விக்னேஸ்வரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்களநாதன் உட்பட பலர் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.