;
Athirady Tamil News

மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் கையளிப்பு

0

இலங்கை விமானப்படையினால் யாழ்ப்பாணம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும் அமைப்பின் கீழ் “என்னிடமிருந்து வடக்கிற்கு ஒரு புத்தகம்” எனும் செயல்திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தில் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்தல் , 73 ஆயிரம் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்காக வழங்குதல் 73 ஆயிரம் மரக்கன்றுகளை வட மாகாணம் முழுவதும் நடுதல் எனும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் ஒன்று 11.10.2024 அன்று இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான புத்தகங்களும் கையளிக்கப்பட்டன. அத்துடன் விமானப்படை தளபதிக்கு கலைமகள் வித்தியாலயத்தின் அதிபரினால் நினைவுசின்னமும் பாடசாலையில் 200வது வருட நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை நலன்புரி பணிப்பாளர் நாயகம் மற்றும் பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.