கனடா கடற்கரையில் கொழகொழவென காணப்பட்ட மர்ம பொருள்., நிபுணர்களும் குழப்பம்
கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தின் கடற்கரையில் கொழகொழவென மர்மமான வெண்மையான பொருளொன்று வெளிப்படுவதாக கூறியுள்ளன.
இது குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
ஸ்டான் டோபின் என்ற உள்ளூர்வாசி, இந்த ஜெல்லி போன்ற ஒன்றை சமைக்காத பாண் போன்று இருப்பதாகவும், அதிலிருந்து காய்கறி எண்ணையின் கசப்பான நாற்றம் வீசுவதாகவும் வர்ணித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல், இந்த பொருள்களை பல கடற்கரைப் பயணிகள் கண்டுள்ளனர்.
மத்திய சூழலியல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (ECCC) இந்த பொருளின் மூலம் பெட்ரோலியம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும், கனடா மீன்வள மற்றும் பெருங்கடல் துறையின் (DFO) கடல்சார் நிபுணர்கள், இதற்கு கடல்சார் உயிரினங்கள் அல்லது கடல் ஸ்பாஞ்சுகளுடன் தொடர்பில்லையென உறுதிப்படுத்தினர்.
கடந்த மாதம், பிலிப் கிரேஸ் முதன்முதலில் இந்த மர்ம பொருளின் படத்தைப் பகிர்ந்தார், அதனால் சமூக ஊடகங்களில் பல்வேறு அனுமானங்கள் எழுந்தன. சிலர் இதை அம்பெர்க்ரிஸ் என்ற திமிங்கலம் உருவாக்கும் அரிய பொருளாகக் கருதினர்.
அதே நேரத்தில், DFO இந்த மர்ம பொருளின் மூலம் மற்றும் கலவையை கண்டறிய ஆராய்ச்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
நடீன் வெல்ஸ், DFO-வின் கடல்சார் ஆராய்ச்சி பிரிவின் தலைவர், இது உயிரியல் பொருளல்ல என உறுதியாகக் கூறினார்.