;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிராக மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்: நாள் குறித்த நெதன்யாகு

0

அக்டோபர் 1ம் திகதி ஈரானின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயலில் காட்டுங்கள்

ஆனால் அந்த திட்டம் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிறன்று வெளியான காணொளி ஒன்றில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பேசுவதை குறைத்துக் கொண்டு, செயலில் காட்டுங்கள் என தமது அமைச்சர்களை எச்சரித்துள்ளார்.

கசிந்த தகவல் ஒன்றில், ஈரானின் ராணுவ, மின்சார உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

மேலும், ஈரானின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் என்பது மத்திய கிழக்கிற்கு அப்பால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றே அப்ஜ்சப்படுகிறது. அது அது பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் என்றால், வளைகுடா நாடுகளுக்கு பதிலடி உறுதி என ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரிக்க வழிவகுக்கும், இது உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.

மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயரும் நிலை ஏற்படும். இது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு சாதகமாக அமையும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தை தடுமாற வைக்க

இதுவே, பெஞ்சமின் நெதன்யாகுவும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த இக்கட்டான சூழலில், ஈரான் மீது எப்போது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகளை பெஞ்சமின் நெதன்யாகு கொண்டுவந்துள்ளார்.

மட்டுமின்றி, ஈரானின் உளவு அமைப்புகள் மீது ஊடுருவி அங்குள்ள அரசாங்கத்தை தடுமாற வைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. அதற்கான நகர்வுகளை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் THAAD என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த THAAD அமைப்பில் ஒரு பெற்றரியை இயக்க 95 வீரர்கள் தேவைப்படும். இதனால் போர் முனையில் முதன்முறையாக அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலில் களமிறங்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.