மிக உயரமான பாலம்… 630 அடி உயரம்: துயரத்தில் முடிந்த பிரித்தானிய பிரபலத்தின் சாகசம்
சமூக ஊடகத்தில் கவனம் பெற பிரித்தானிய பிரபலம் ஒருவர் மிக உயரமான பாலத்தில் இருந்து 630 அடி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரிழப்பில் முடிந்துள்ளது
வெறும் 26 வயதேயான அந்த பிரித்தானிய இளைஞர் ஸ்பெயின் நாட்டின் Puente de Castilla-La Mancha பாலத்தில் ஏற முயன்றுள்ளார். சமூக ஊடகத்தில் கவனம் பெறும் அவரது முயறிசி, ஆனால் பேரிழப்பில் முடிந்துள்ளது.
அந்த நபர் 630 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஸ்பெயின் நாட்டிலேயே உயரமான பாலம் அது என்பதால், அதில் சாகசம் முன்னெடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உள்ளூர் கவுன்சிலரான மக்கரேனா முனோஸ் இந்த துயரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இது போன்ற சாகசங்கள் எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடிய காரியம் அல்ல என்பதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றே மக்கரேனா முனோஸ் தெரிவித்துள்ளார்.
மாட்ரிட் நகரின் தென்மேற்கே 90 நிமிடங்கள் தொலைவில் டேகஸ் ஆற்றின் மீது இந்தப் பாலம் அமைந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், இன்னொரு 24 வயது பிரித்தானியருடன் இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.
காப்பாற்ற போராடியுள்ளனர்
வெளியான தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்தில் தற்போது பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி பகல் 7.15 மணியளவில் குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தேசிய பொலிசார் மற்றும் உள்ளூர் தியணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள், அவசர உதவி மருத்துவக் குழுவினர் என அனைவரும் அந்த நபரை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால் அந்த நபர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.